கோவை மாவட்டம், பீளமேடு முருகன் நகர் ஹட்கோ காலனி பகுதியில் பாரம் ஏற்றி வந்த லாரி அதிக பாரம் தாங்காமல் சாலையிலேயே அந்தரத்தில் தொங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பீளமேடு ரயில் நிலையத்திலிருந்து சரக்குகளை ஏற்றி வரும் கனரக லாரிகள் அவ்வழியே வந்து செல்வதற்கு ஏற்கனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சாலையிலிருந்த சிறு குழியில் இறங்கி பாரம் தாங்காமல் பின்பக்கமாக தூக்கி அந்தரத்தில் தொங்கி வருவதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.