ஜி.எஸ்.டியில் சிறு வர்த்தகர்களுக்கு சலுகை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி

நாடு முழுவதும் கடந்த ஜுலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் நடந்த சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும், பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகள், தின்பண்டங்கள் உள்பட 27 பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

அண்மையில் ஜி.எஸ்.டி. மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்கள் :

* 1.5 கோடி ரூபாய்க்கு கீழ் வருவாய் எடுக்கும் வணிகர்கள், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்தால் போதும்.

* ஏசி உணவகங்களின் ஜிஎஸ்டி வரி 18% இருந்து 12% ஆக குறைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது

* ரூ.50,000கும் மேல் நகைகள் வாங்குபவர்கள் ஆதார், பேன் விவரங்களை வழங்காத தேவையில்லை.

* ஸ்டேஷனரி பொருட்கள் மீதான வரி 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது

* டீசல் எஞ்சின் பொருட்கள் மீதான வரி 28ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு

* ப்ராண்டுகள் அல்லாத ஆயுர்வேத மருந்துகள் மீதான வரி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைந்தது

* ஏப்ரல் 1 முதல் ஈ-வாலெட் எனப்படும் புதிய இணையதள கணக்கு துவக்கப்படும்

* ஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யில் (IGST) இருந்து 6 மாதங்கள் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது/ 

இந்த நடவடிக்கையை எடுத்த பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோருக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் வனிதா மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கிய முடிவின் மூலம் மத்திய அரசு மக்களுக்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதை காட்டுகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மூலம் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் பயன்பெறுகின்றன. 

இதேபோன்று குறிப்பிட்ட ஒருசில துறைகளிலும் விதிக்கப்பட்ட வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என நம்புகிறோம். சிறு, குறு தொழில்களின் ஒன்றான கிரைண்டர் தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பையும் குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...