மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதம்

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் மிகஅதிகம் பேரை பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்யானது ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதால், இப்புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

கடந்த 2003ல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் பற்பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இந்நிகழ்வின்போது, அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் (X-கதிர்பட சோதனை), விழிப்புணர்வு கையேடுகள் வழங்குதல், குறும்படம் வெளியிடுதல் முதலியவை நடைபெறும்.

அதன்படி, இந்த வருடம் ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் பரிசோதனை நடைபெற உள்ளது.



செப்டம்பர் 30 ம் தேதியன்று மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெருமுயற்சியில் எல்லோரும் சுலபமாக கையாளும் வகையில், புரிந்து கொள்ளும் வகையிலும் செவிமடல்கள் வழியாக விபரங்களைக் கேட்டறிவதற்கு "Blue Tooth Breast Cancer" என்ற இணையத்தள வழி செயலியினை பி.குகன் அறிமுகப்படுத்தினார்.



முன்னதாக, எஸ் என் ஆர் சான்ஸ் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. இலக்ஷ்மிநாராயணசாமி தலைமைpயல் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.லட்சுமி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு இணையதள வழி செயலியை வெளியிட்டார்.



Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...