நெல்லையில் செய்தியாளர்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறையை கண்டித்து கோவை பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அருகில் வெடி சத்தம் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை செய்தியாளர்கள் மற்றும் தினகரன் பத்திரிகை செய்தியாளர் உள்ளிட்ட மூவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பணகுடி காவல் ஆய்வாளரைக் கண்டித்தும், வழக்கை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



ஆர்ப்பாட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதலை நடத்தியதை கண்டித்தும், வழக்கு பதிவு செய்த பணகுடி காவல் ஆய்வாளரை கண்டித்தும், வழக்கை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...