சொத்துவரி உயர்வு என தவறுதலாக சித்தரிக்கப்படுவதை நம்பவேண்டாம்- கோவை மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சியில் உபயோக மாற்றம் செய்யப்பட்ட கட்டிடங்கள், விடுபட்ட கட்டிடங்கள் மற்றும் விதிகளின்படி கட்டிடத்தின் முழு பரப்பளவிற்கு வரிவிதிப்பு செய்யப்படாத இனங்களுக்கு விதிகளின்படி சொத்துவரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதைத் தவிர சொத்துவரி உயர்வு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சொத்துவரி உயர்வு என தவறுதலாக சித்தரிக்கப்படுவதை நம்பவேண்டாம் எனவும் கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாநகராட்சியில் ரூ.159.85 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 2-ம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு முழுமையாக முடிக்கப்பெற்று மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் மாமன்ற தீர்மானங்களின் படி திருத்திய குடிநீர் கட்டணம், கூடுதல் வைப்புத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய குடிநீர் விநியோக துணை விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திருத்தப்பட்ட வைப்புத் தொகைகள் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கட்டணங்கள் வசூலிக்கப்படாத காரணத்தினால் தணிக்கை தடை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில் ஏற்கனவே வசூல்செய்யப்பட்டு வரும் வைப்புத்தொகை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விகிதத்தில் உள்ளதால் இப்பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்புதாரர்கள் இத்தொகையினை செலுத்த தேவையில்லை.

மேலும், 01.10.2013-க்குப் பின்னர் பெற்றுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு புதிய விகிதத்தில் வைப்புத்தொகைகள் வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

ஆகவே, 01.10.2013-க்கு முன்னர் உள்ள இணைப்புகளுக்கு மட்டும் திருத்தப்பட்ட வைப்புத்தொகை செலுத்தக் கோரி அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுமக்கள் திருத்தப்பட்ட வைப்புத் தொகையினை மாநகராட்சிக்கு தவறாமல் செலுத்தி, மாநகராட்சியின் குடிநீர் வளர்ச்சி திட்டங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...