கோவையில் செயல்படும் மத்திய அரசு அச்சகத்தை மூடும் முயற்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட உள்ளது - கு.இராமகிருட்டிணன்

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூடுவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியால் தமிழகம்  வஞ்சிக்கப்பட உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 



கடந்த 1964-ம் ஆண்டு காமராசர் ஆட்சியின் போது மத்திய அரசின் அச்சகம் போராடி கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் நிறுவப்பட்டது. இதில் 70 பேர் தற்போது பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.



இந்தியா முழுவதிலும் இது போல் 17 அச்சகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிந்தியாவில் உள்ள 6 அச்சகங்களை முழுவதுமாக மூடிவிட்டு அதனை வட மாநிலங்களில் உள்ள அச்சகங்களோடு இணைத்து அவற்றை நவீனப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

அதற்காக, தமிழகம், கேரளாவில் உள்ள அச்சகங்க நிலங்களை விற்கவும், கர்நாடகத்தில் உள்ள அச்சக நிலத்தை அம்மாநில அரசிடம் ஒப்படைப்பதாகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



தென்னிந்தியாவித்கு ஒரு அச்சகத்தை கூட விட்டு வைக்காமல், வட இந்திய அச்சகங்களை நவீனப்படுத்த நினைப்பதிலேயே தமிழகம் வஞ்சிக்கப்படுவது உண்மை என புலப்படுகிறது. உடனடியாக இந்த முடிவு கைவிடப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களிடம் பேசி போராட்டம் நடத்த உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...