கோவை - மங்களூரூவுக்கு புதிய விமான சேவை - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு


கோவையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் கோவையில் இருந்து மேலும் ஒரு புதிய விமான சேவையை அறிவித்திருந்தது. 

அதாவது, கோவையில் இருந்து பெங்களூரூவுக்கும், பெங்களூரூவில் இருந்து கோவைக்கும் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த விமானப் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

அதோடு, ஐதராபாத், கொல்கத்தா, விஜயவவாடா, மும்பை, புனே, மங்களூர், டெல்லி போன்ற நகரங்களின் இணைப்பு விமானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த விமான சேவை இருக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. 

விமான பயண விபரம்:  கோவையில் புறப்படும் நேரம் மாலை 04.05 - பெங்களூரூவுக்கு சென்றடையும் நேரம் மாலை 05.05. இதேபோல, பெங்களூரூவிலிருந்து புறப்படும் நேரம் மாலை 02.50 - கோவைக்கு சென்றடையும் நேரம்  மாலை 03.45. 

புதிய சேவையின் தொடக்க சலுகை விலையாக (ஒரு முறை செல்வதற்கு மட்டும்) ரூ.1949 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கோவை மற்றும் மங்களூரூ இடையே அக்டோபர் 4-ம் தேதி முதல் புதிய விமான சேவையையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த விமான சேவை இருக்கிறது. 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...