கோவை மாநகராட்சியின் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

கோவை மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை, குப்பைகளுக்கு வரி உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்து வரும் கோவை மாநகராட்சியினைக் கண்டித்து குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக் கழகங்களுக்கு உட்பட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.



இந்த முற்றுகைப் போராட்டத்தில் கோவை மாநகர மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை, குப்பைவரி உள்ளிட்ட மாநகராட்சியின் மக்கள்விரோதப் போக்கினைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் மற்றும் மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக செயலாளர்கள், குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட பகுதிக்கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...