மாநகராட்சி ஆணையர் தலைமையில் குடிநீர் சீராக விநியோகிப்பது குறித்து ஆலோசனை

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சி பகுதிகளில் தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு 40 எம்.எல்.டியிலிருந்து, 80 எம்.எல்.டி யாக உயர்ந்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து இன்று (25.09.2017) கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன்,  தலைமையில் குடிநீர் சீராக விநியோகிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமான சிறுவாணி திட்டம், பில்லூர்-1, பில்லூர்-2, ஆழியார் திட்டம் மற்றம் பவானி (க.வ.திட்டம்) திட்டங்களிலிருந்து பெறப்படும் குடிநீரின் கொள்ளளவு குறித்து ஆணையாளர் கேட்டறிந்து, கூறிய அளவு குடிநீர் உயர்த்தி வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அனைத்து உதவி செயற்பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டார். அனைத்து உதவி ஆணையர்களும் குடிநீர் அளவு உயர்த்தி வழங்கப்படுகின்றனவா என களஆய்வு செய்து உறுதிபடுத்தி, வாரம் ஒருமுறை எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு குடிநீர் அளவு விநியோகிக்கப்படுகின்றன என்ற தகவல்களை ஆணையாளருக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டார். 



மேலும், சிங்காநல்லூர், பீளமேடு, ஒண்டிபுதூர் மற்றும் புலியகுளம் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி குடிநீரின் அளவை உயர்த்தி, சீராக வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குடிநீர் அளவு உயர்ந்துள்ளதால் குடிநீர் லாரிகளை தேவையான இடங்களில் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

கடந்த வறட்சி காலங்களில் சிறப்பாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனையை சரிசெய்தது போல் வரும் காலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு குடிநீர் விநியோகம் சீராக வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகர பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் சி.சொக்கலிங்கம், செயற்பொறியாளர்கள் உதய்சிங், ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அனைத்து மண்டல உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...