பொக்லைன் இயந்திரங்களால் மண் வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி தவளை, நண்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் வண்டல் மண் எடுப்பதால் மண்வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி தவளை, நண்டு, மண்புழு, புழுக்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளான இன்று பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் ஆகியவற்றுடன் மனு அளிக்க வந்தனர்.



அப்போது, கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுப்பதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், குளக்கரையிலும், நிலத்திலும் வாழும் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் போன்ற உயிரினங்கள் அழிந்து போவதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.



தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவான இது போன்ற நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் மழைவளம், நீர் வளம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகப்படியாக வண்டல் மண் எடுப்பதையும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனைத்தொடந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வழங்கினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...