சத்தியமங்கலம், ஆசனூரில் வனச்சுற்றுலா: முன் ஏற்பாடுகள் தீவிரம்

தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுலாவுக்காக திறந்துவிடப்பட உள்ளது. சத்தியமங்கலம், சுமார்1 லட்சத்து 411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி. இது ஆசனூர், சத்தியமங்கலம் என இரு வனக்கோட்டங்களாக பிரிக்கப்பட்டு புலிகள் காப்பக விதிமுறைகள்படி செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகத்தில் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்புபடி 75 புலிகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பல்வேறு புலிகள் காப்பகத்தில் தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் அனுமதியோடு வனசுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சத்தியமங்கலத்திலும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வனப்பகுதியில் 50 கி.மீ தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று வனவிலங்குகளை நடமாட்டத்தை பார்த்து ரசித்தல், மலையேறுதல் மற்றும் யானை சவாரி ஆகியவை இடம்பெற உள்ளதாகவும், விரைவில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானிசாகர், ஆசனூர், கேர்மாளம், தெங்குமரஹாடா வனப்பகுதி மற்றும் தலமலை வனப்பகுதியில் சுற்றுலாவுக்கு திறக்கப்பட உள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சார்பில் வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை அழைத்துச்செல்வதுக்காக 30 பேர் அமரக்கூடிய இருக்கைகளுடன் கூடிய பிரத்யேக வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசனூரில் புலி போன்ற உருமைப்பு கொண்ட சுற்றுலா பயணிகள் தங்கும் அறை, வரவேற்பு அறையும் கட்டப்பட்டு அதுக்கு பெயிண்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. இதேபோல புலிகள் பாதுகாப்பு வலியறுத்தி வனத்துறை சார்பில் பனியன், மரப்பொருள்கள் விற்கப்பட்டும் வருகிறது.

சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்வதுக்கான ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...