சோமனூரில் பேருந்து கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமைடந்தனர். உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகையாக அறிவித்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000, காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கினார்.
மேலும், பலத்த காயமடைந்தவர்களின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில் பேருந்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் கால் முறிந்த கல்லூரி மாணவி லதா மற்றும் விவசாயி மாரப்பன் ஆகியோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அனைத்து சிகிச்சைகளும் முடிந்த நிலையில், மாரப்பன் வீடு திரும்பவுதாக இருந்தது. ஆனால், மொத்தம் ரூ.3,30,000 மருத்து செலவில், ரூ.1,50,000 ரூபாய் மட்டுமே அவர் செலுத்தியிருந்தார். இதனால், மாரப்பனை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவ நிர்வாகம் மறுத்தது. எஞ்சிய தொகையை செலுத்தி விட்டு செல்லுமாறும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாரப்பனின் உறவினர்கள், மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனையின் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, கால்முறிந்த கல்லூரி மாணவிக்கு அரசு பணி வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக பிரபல தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரபாத் விவேகானந்தன் பேசுகையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாரப்பனின் மொத்த மருத்துவ செலவு ஐ.3,30,000 ஆகும். மருத்துவமனையில் அனுமதிக்கும் போது ரூ.1,20,000 செலுத்தினார். எஞ்சிய தொகையான ரூ.2,00,000 செலுத்திவிட்டு டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வந்து பார்த்து விட்டு சென்றனர். அப்போது, இங்கேயே சிகிச்சையை தொடருங்கள் எனக் கூறினர். ஆனால், மருத்துவச் செலவுகளை ஏற்பது குறித்து எந்த தகவலும் அவர்கள் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.