ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளன் ஒரு மாதம் பரோல் ஆகஸ்ட் மாதம் 24 ந்தேதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் பரோலில் விடுதலை ஆனார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனிக்க பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரோல் நாளையுடன் முடியும் நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனின் பரோலை மேலும் ஒரு மாத நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து இருந்தார். பரோல் நீட்டிப்புகான கோப்புகள் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டது.
இந்த நிலையில், பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியது. பேரறிவாளனின் பரோல் மேலும் 1 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது, அந்தத் தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறுத்துள்ளார். 'பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து இதுவரை தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார்.