பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார். பேரறிவாளனின் ஒரு மாத பரோல் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இந்நிலையில், தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டதற்கான நகல் மத்திய புழல் சிறை தலைமை அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது அக்டோபர் 24-ம் தேதி வரை பரோல் வழக்கப்பட்டிருக்கிறது. பேரறிவாளன் மற்றும் அவரது பெற்றோரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, பேரறிவாளன் வீட்டில் இருந்து 10 மீட்டர் தூரம் தாண்டி வெளியே செல்ல கூடாது, வெளிநபர்கள் பேரறிவாளன் வீட்டில் தங்க கூடாது, அவருக்கு 24 மணி நேரமம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், அதில் எவ்வித மாற்றமும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...