கோவையில் முதல் முறையாக ஹெச்.அண்ட் எம். ஆடை அலங்காரக் கடை திறப்பு

ஆடை, அலங்கார விற்பனையகத்தில் சர்வதேச தரம் வாய்ந்த ஹெச் அண்ட் எம் எனப்படும் ஹென்னிஸ் அண்ட் மவுரிட்ஸ் ஏபி, ((H&M), Hennes & Mauritz AB) குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை நிறுவியுள்ளது. 

இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஹெச்.அண்ட் எம். ஆடை, அலங்கார விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் முதல் முறையாக தனது பாதத்தை பதித்துள்ளது. கோவை, சத்தி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ப்ரோஷான் வணிகவளாகத்தில் (Prozone Mall) ஹெச் அண்ட் எம் விற்பனையகம் இன்று (22.09.2017) திறக்கப்பட்டது. 



ஹெச். அண்ட் எம். நிறுவனத்தின் இந்திய மேலாளர் ஜென்னி எய்னோலா மற்றும் பிராந்திய மேலாளர் மிக்கோ அலட்டோலா மற்றும் கடையின் மேலாளர் ஹரிஹரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி, கடையை திறந்து வைத்தனர். அப்போது, ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த ஆடை வடிவமைப்புக்களை பார்வையிட்டனர். 

 கடையில் முதல் 3 வாடிக்கையாளக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ. 5,000 மதிப்பிலான பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. ப்ரோஷான் வணிகவளாகத்தில் இரண்டு தளங்களை கொண்ட ஹெச். அண்ட் எம். ஆடை அலங்கார விற்பனையகம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். 



இந்தப் புதியக் கடையில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு புதிய புதிய டிசைன்கள் வந்திருப்பதாக கடையின் மேலாளர்கள் தெரிவித்தனர். 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...