நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது. இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிய மெர்சல் டீசர், வெளியான 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி பார்வைகள் பெற்று உள்ளது. எனவே, யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற சாதனையை மெர்சல் டீசர் படைத்துள்ளது. 

இந்த நிலையில், ஏ.ஆர். பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், மெர்சல் என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மெர்சலாயிட்டேன் மற்றும் மெர்சல் ஆகிய இரு வார்த்தைகளும் ஒரே அர்த்தம்தான் எனக் கூறியுள்ளார். எனவே தலைப்பை முறைகேடாக டிரேட் மார்க்கில் பதிவுசெய்துள்ளதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள்,  மெர்சல் என்ற பெயரில் விஜயின் படத்தை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.  அதிகப் பொருட்செலவில் இந்தப்படம் தயாரிப்பதால் தடை விதிக்கக்கூடாது என்ற தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.  

மேலும்,இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அக்டோபர் 3-ம் தேதி வரை மெர்சல் என்ற பெயரில் படத்தை விளம்பரம் செய்யக் கூடாது எனக் கூறி வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...