கோவை செல்வபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரட்டைக் கொலை - 4 பேர் கைது

கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோத் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில், ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக கூறப்படுகிறது. இது தொடர்பாக அண்மையில் இருவரும் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்துள்ளனர். 



இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் மற்றும் செல்வம் ஆகியோரை மர்ம நபர்கள் சிலர் இன்று (22.0902017) காலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். 

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த செல்வபுரம் போலீஸார்,  சூர்யா, பாபுஜி, மோகன், சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்விரோதம் காரணமாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...