ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள், கிளீனர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு முறையாக மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஓட்டுநர்கள், கிளீனர்கள் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கூறுகையில், மாத ஊதியம் 1-ம் தேதி முதல் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஓட்டுநருக்கு அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் மற்றும் கிளீனருக்கு ரூ.12 ஆயிரம் மாத ஊதியமாக உயர்த்தித் தர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அறிவித்த சதவிகிதப்படி இனி வரும் காலங்களில் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும், பணியாளர் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் மற்றும் கிளினருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பணிக்கு திரும்பும்வரை ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



முன்னதாக, இந்த முற்றுகைப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...