கொத்தடிமைகளாக நடத்தப்படும் வடமாநில தொழிலாளர்கள்- புகாரை ஏற்க மறுக்கும் காவல்துறையினர்

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும், இதுகுறித்து புகார் அளித்தால் காவல்துறையினர் ஏற்க மறுப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மூவர் கூறியதாவது:-

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தனேஷ்வர், வினோத்குமார் மற்றும் மகேந்திர குர்கே ஆகிய நாங்கள் மூவரும் கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தோம்.

அப்போது எங்களை தொடர்புகொண்ட ஒருவர் அதிக ஊதியத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கோவை இரயில் நிலையம் வருமாறு அழைத்தார்.

இதைத்தொடர்ந்து, எங்கள் மூவரையும் கோவையில் இருந்து ஈரோட்டிற்கு அழைத்துச் சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்து அடித்து, துன்புறுத்தி பணம் மற்றும் செல்போன்களை பிடிங்கி வைத்துக்கொண்டார். 

மேலும், மூன்று பேரையும் ஈரோடு, ஆத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு 3 ஏஜெண்ட்கள் அழைத்து சென்று ஒரு போர்வெல் நிறுவனத்தில் தலா 8 ஆயிரம் ரூபாய் வீதம் கொத்தடிமைகளாக விற்றுவிட்டார். 

அங்கு, முறையாக பணியாற்றவில்லை எனில் உடல் உறுப்புகளை விற்று விடுவோம் என ஏஜெண்ட்கள் மிரட்டுகின்றனர். ஏஜெண்ட்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் சத்தீஸ்கர் காவல் துறைக்கு புகார் அளித்தோம். தொடர்ந்து, உளுந்தூர்பேட்டையில் இருந்து உதவி கேட்டு கோவைக்கு தப்பி வந்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து சிஐடியு புலம் பெயர்ந்த தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், கோவை மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் தரகர்கள் மூலம் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க அரசும், காவல் துறையும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. கொத்தடிமைகளாக விற்க முயன்ற தரகர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. எல்லையை காரணம் காட்டி காவல் நிலையத்தில் புகாரினை வாங்க மறுத்து வேறு காவல் நிலையம் செல்ல அறிவுறுத்துகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை எல்லையை காரணம் காட்டி புறக்கணிப்பது கண்டனத்திற்குறியது" என்றார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...