வணிகர்கள், வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

உணவு பாதுகாப்பு மற்றும தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் உணவு பொருள் வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையில், உரிமம் மற்றும் பதிவுகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, உணவு பொருள் தயாரிப்பவர்கள், இருப்பு வைப்பவர்கள், விநியோகம் செய்வோர், உணவு விடுதிகள், ஹோட்டல், பேக்கரிகள், தள்ளு வண்டிகள் உள்ளிட்ட உணவு விநியோகிகும் வாகனங்கள், இறைச்சி கடைகள், கோயில் பிரசாத கடைகள், இலவச உணவு மையங்கள் மற்றும் உணவு கையாளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்வது அவசியமாகும்.

வருடாந்திர வியாபாரம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்வோர் ரூ.100 செலுத்தி  அந்தந்த பகுதியில் உள்ள பொதுசேவை மையங்களின் மூலம் பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ரூ.12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்யும் தயாரிப்பாளர் தவிர பிற வியாபாரிகள் ரூ.2000 கட்டணமாகும். ரூ.3000 மற்றும் ரூ.5000 தயாரிப்பு அளவை பொறுத்து கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விவரங்களுக்கு அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்களை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்தில் நேரடியாபக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். www.fssai.gov.in என்ற இணையதளத்திலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

இதனிடையே, உணவு பொருள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை சம்பந்தமான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், பொதுமக்கள [email protected] என்ற ஈ-மெயில் வழியாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...