வங்கி உதவியாளர் பணிக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்வு- வாய்ப்பு பறிக்கப்படுவதாக மாணவர்கள் புகார்

தமிழகத்தில் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு இருப்பதால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டு, பிற மாநிலத்தவர்கள் அதிகளவில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக வங்கி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

''இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவாக ஆயிரத்து 277 வங்கி உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் தமிழக பொதுத்துறை வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. 

பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் 6 மாதங்களுக்குள் மாநில மொழி தேர்வு நடத்த முடிவு செயப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில மொழி தேர்வு நடத்தப்படமால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், பிராந்திய மொழி தேர்வு புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். பிற மாநில இளைஞர்கள் அதிகளவில் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழகத்தை சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், தமிழக மாணவர்கள் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்களை புறக்கணிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் வங்கிகளை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படும். 

எனவே, தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 277 பணியிடங்களும் தமிழக மாணவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும், இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தபால் மூலம் மனு அளிக்க உள்ளோம்" இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...