தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீதான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்ததால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று முன்தினம் (செப்.,18) உத்தரவிட்டார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் விளக்கம் அளித்திருந்தார். சபாநாயகரின் இந்த உத்தரவிற்கு எதிராக 18 எம்.எல்.ஏ.,க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி துரைசாமி முன்னிலையில் துவங்கியது. இதில், ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர், தினகரன் ஆகியோர் தரப்பில் கபில் சிபில், சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே, அரிமா சுந்தர் உள்ளிட்ட உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர். தினகரன் தரப்பில் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து, சபாநாகர் தனபால் சார்பில் அரிமா சுந்தர் வாதிட்டார். தினகரன் தரப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக வாதங்களை முன்வைத்தார். 

அப்போது, நீதிமன்றத்தில் அரசுகளை குறை கூறக்கூடாது, இது வழக்கிற்கு தேவையற்றது எனக் கூறி அரிமா சுந்தர் தனது வாதத்தை தொடங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என சபாநாயகர் சார்பில் கேட்கப்பட்டது. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கேட்கப்பட்டது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல் இருக்க அவகாசம் தேவை எனவும் கேட்கப்பட்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயாராக உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி துரைசாமி, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது என்ற உத்தரவு மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கும். மறுஉத்தரவு வரும் வரை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது. 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (செப்.20) முடியும் நிலையில், தடை நீட்டிக்கப்பட்டது. சபாயாகர், முதல்வர், தலைமை செயலாளர், கொறடா ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

தினகரன் தரப்பின் முக்கிய கோரிக்கையான, 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்பதை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...