தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ்-யில் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் தங்கமழை திட்டம் துவக்கம்


தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் 2017ம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு அனைத்து விற்பனை நிலையங்களிலும் 31-08-2018 வரை 30 சதவிகிம் வரை தள்ளுபடி அளித்துள்ளது.

இது குறித்து மண்டல மேலாளர் கூறியதாவது:- கோவையில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு சேலைகள், வேட்டி, சட்டை, குர்தீஸ், சுடிதார், படுக்கை விரிப்புகள் என அனைத்திற்கும் தள்ளுபடி உள்ளது.



பட்டு சேலைகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை 15-ற்கும் மேற்பட்ட வகையான சேலைகள் விற்பனைக்கு உள்ளது. இதற்கு 30 சதவிகிதம் தள்ளுபடி உள்ளது. மேலும் பட்டு பூச்சிகளை கொல்லாமல் பட்டு பூச்சிகள் கூட்டை விட்டு வெளியேறிய பிறகு பட்டு நூல் எடுத்து அகிம்சா பட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள சேலைகள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு 17 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 20 கோடியாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு மொத்த விற்பனை 3.81 கோடிகள், நடப்பாண்டில் விற்பனை குறியீடாக 4.65 கோடி நிர்ணயம் செய்யபட்டுள்ளது" என்றார்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...