மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளின் சாதனைகளை விளக்கும் காலாண்டர் வெளியீடு

ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 12 பேரை தேர்வு செய்து, அவர்களின் புகைப்படத்துடன் கூடிய காலாண்டரரை வெளியிட்டு வருகிறது. 



அந்த வகையில், 3-வது ஆண்டாக விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாற்றுத் திறனாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய,  'ஐம் ஸ்பெசல்' என்ற பெயரில் 2018-ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா முழுவதிலும் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்து தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வரும் 12 விளையாட்டு வீரர்களின் புகைப்படங்கள் 'ஐம் ஸ்பெசல்' காலண்டரில் இடம் பெற்றுள்ளன.



திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை நிறுவனர் பாலாஜியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.



இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் சுவர்கா பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்னலதா பேசுகையில், 'மாற்றுத்திறனாளிகளான ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து அனுதாபங்களை எதிர்பார்ப்பதில்லை மாறாக, எங்கள் திறமைகளுக்கு ஆதரவை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து எங்களை மதிப்பிடாமல் நாங்கள் யார்? என்பதனை வைத்து எங்களை மதிப்பிடுங்கள். இந்த காலண்டர் வெளீயீட்டு நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலமாக எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கும் அனைவருக்கும் நன்றி' என்றார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...