2015-2016 ஆண்டு சோமனூர் பேருந்து நிலையம் மராமத்துப்பணிக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு : என்ன செய்தார்கள் ஒப்பந்ததாரர்கள்?

சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பேருந்து நிலையத்தின் அருகிலேயோ அல்லது, பேருந்து நிலைய கூரையின் கீழோ நிற்க பொதுமக்கள் அஞ்சி நடுங்கும் வேளையில், சூலூர் பேருந்து நிலையத்தில் உள்ள ‘போர்ட்டிக்கோ’-வுக்கு இரும்பு கம்பிகள் கொடுத்து ‘முட்டு’ கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் இதனை செய்திருந்தாலும், இதில் எத்தனை ஊழல் ஒழிந்துள்ளதோ?, இந்த பேருந்து நிலையம் எப்போது இடிந்து விழுமோ? என்று மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2015- 2016 ஆம் ஆண்டு சோமனூர் பேருந்துநிலையத்தின் மராமத்துப்பணிக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த பணிகளை முடிக்க சூலூரை அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.



ரூ.50 லட்சம் செலவு செய்யப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்தது எப்படி? என்ற கேள்வியை மக்கள் பலரும் எழுப்பி வந்ததை தொடர்ந்து, மராமத்துபணியினை மேற்கொண்ட நிறுவனத்தாரிடம் பேச புறப்பட்டோம்.

இது குறித்து, சம்பந்தபட்ட நிறுவனத்தார் சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது:-

சோமனூர் பேருந்து நிலையத்தில் மராமத்துபணியினை மேற்கொள்ள கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் எடுத்தது உண்மை தான். ஆனால், எங்கள் நிறுவனம் அந்த பேருந்து நிலையத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதை அறியாமலேயே பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

பணிகள் என்ன?

தற்போது இடிந்து விழுந்த கூரையில் எந்தவித புனரமைப்பையும் எங்கள் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. அந்த கட்டிடம் கடந்த 1997-ம் ஆண்டு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்த நடைபாதைகள், கீழ் தளங்கள், சுற்றுச்சுவர், பாதாள சாக்கடை பணிகள், கழிவறை கட்டுதல் மற்றும் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகளை தான் நாங்கள் மேற்கொண்டோம். இந்த பணிகளுக்கான செலவாகத்தான் ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நாங்கள் இந்த பணிகளை செய்துகொண்டிருக்கும் போது, இடிந்து விழுந்த கட்டிடத்தில் எந்த ஒரு விரிசலோ அல்லது சிதைவோ ஏற்படவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் அன்றே அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்து, கட்டிடத்தை புனரமைக்கும் பணியினை மேற்கொண்டிருப்போம். 

இவ்வாறு அந்த ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...