டிடிவி தினகரன்தான் உண்மையான துரோகி - பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து, தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :-  யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது. பிரிந்த இயக்கம் ஒன்றிணைந்த வரலாறு இல்லை, ஆனால் நாம் இணைந்துள்ளோம். பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்காதது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

நம்மை விமர்சிக்க தினகரனுக்கு தகுதி இல்லை. உண்மையில் தினகரன் தான் துரோகி. தினகரனை கட்சியை விட்டு நீக்கி வைத்தவர் ஜெயலலிதா. 1000 தினகரன் வந்தாலும் கட்சி, ஆட்சியை அசைக்க முடியாது. அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தினகரன் எங்களை எப்படி நீக்க முடியும். ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நாங்கள் தான்.

தமிழகத்தில், 2வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்தது அதிமுகதான். இதற்கான பெருமை ஜெயலலிதாவை சேரும். ஜெயலலிதா இல்லாத நிலையில், ஒன்றிணைந்த நம்மை யாராலும் பிரிக்க முடியாது. எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். திமுக தலைவராக கூட முடியாத ஸ்டாலினால் எப்படி முதலமைச்சராக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...