தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்க நிர்வாக குழுமத்தின் 19வது ஆண்டு பொதுக்கூட்டம்

தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் (TEKA) நிர்வாக குழுமத்தின் 19வது ஆண்டு பொதுக்கூட்டம் கோவை ரேஸ்கொர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக சைமென்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரமேஷ் கைமல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர், தமிழ் நாடு மின் நுகர்வோர் சங்கம் (TEKA) நிர்வாக குழுமத்தின் 19வது ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்களை வரவேற்று பேசுகையில், நமது குழுமம் தமிழ் நாட்டிலுள்ள மின் நுகர்வோர்களுக்கு பல முறைகளில் தொண்டாற்றி வருகின்றது. மேலும் நுகர்வோர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மிகவும் அக்கறை செலுத்தி வருகிறது. சென்ற வருடம், மற்ற வருடங்களைப் போலவே , நம் TECA வின் முயற்சியால் HT/LT  மின் கட்டணங்களை பழைய விகிதத்திலேயே (அதிகரிக்காமல்) இருத்திட செய்துள்ளோம். 



நெடுநாட்களாக இருந்து வந்த cross subisdy surcharge யூனிட்டுக்கு ரூ3.51 லிருந்து ரூ1.67க்கு குறைக்கப்பட்டுள்ளது. இது TNERC கட்டளையின் படி 11.8.17 முதல் செயலுக்கு வந்துள்ளது. அதே போல், ஸ்செடுலிங் மற்றும் சிஸ்டம் கட்டணங்கள்  ரூ.2000 லிருந்து ரூ.193.74க்கு குறைக்கப்பட்டுள்ளது. இது நம் சங்கத்தின் ஒரு பெரிய வெற்றி ஆகும். ட்ரான்ஸ்மிஷன்  மற்றும் வீலிங் கட்டணங்கள் சற்றே உயரத்தப்பட்டுள்ளது. ஆனால் அது நம் நுகர்வோருக்கு மிகப்பெரிய பாதிப்பை தரவில்லை.

நமது சங்கம் TANGEDCO வின் நடவடிக்கைகளை மிகவும் கூரிய கண்ணோட்டத்த்தில் பார்த்து வருகிறது. பல பிரச்சினைகளை தீர்த்தும் வருகிறது. அப்படி செய்யாமல் இருந்திருந்தால், நம் நுகர்வோருக்கு மிகவும் இன்னல் வந்திருக்கக்கூடும். TNERC ஆணைப்படி SOS கட்டணங்கள் வேறு பட்டமுறையில் நிறைவேற்றப்பட இருந்ததை மேல் நீதி மன்ற தீர்ப்பினால் அதை மாற்றி, REC காற்றாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3000 லிருந்து ரூ.300 க்கு குறைக்க செய்தோம். மேலும் REC அல்லாத காற்றாலைகளுக்கு ரூ.800க்கு குறைக்க செய்தோம்.

அதே போல், TANGEDCO அதிகாரிகள் (CAPTIVE GENERATION) மற்றும் நுகர்வோருக்கு வகுத்துள்ள விதிகளை ஆய்வு செய்ய முயற்சித்த போது, நம் TECA  அதை தடுத்து நிறுத்தி, அந்த மாதிரி செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை என எடுத்துரைத்தது. இதனால் CSS கட்டணங்களிலிருந்து (கோடிக்கணக்கான ரூபாய்) பாதுகாக்கப்பட்டார்கள். இந்த பிரச்சினை இப்போது TNERC முன் உள்ளது. TANGEDCO வுக்கு நம் CGP விதிகளை ஆய்வு செய்யும் உரிமை இருந்திருந்தால் நம் நுகர்வோர்கள் மிக அதிக CSS க்கு ஆளாகியிருப்பார்கள். 

அதனால், தொழிற்சாலைகள் மூடக்கூடிய அபாயம் கூட நிகழ்ந்திருக்கக்கூடும். கட்டண விதிகளை பற்றிய விவரங்கள் சேகரிக்க TNERC முற்பட்டபோது நம் TECA அதன் முன் ஒரு விண்ணப்பத்தை வைத்தது. மேலும் பொது மக்கள் கருத்து பங்களிக்கும் மாநாட்டிலும் நம் கருத்துக்களை ஆணித்தரமாக தெரிவித்தது. அதனால் தான் இப்போது நம் எல்லோரும் ஒப்புக்கொள்ளுமாறு கட்டண விவரத்தை TNERC வெளி விட்டிருக்கிறது.

அதே போல், HARMONICS கட்டணம் பற்றிய விவகாரத்தில் கூட, TECA நம் எல்லோருக்கும் மன நிம்மதி தரக்கூடிய விதி முறை, அதாவது 11/22 KV வரை நுகர்வோருக்கு இந்த கட்டணம் வரக்கூடாது என்ற நிலைப்பாடை மேல் நீதி மன்றம் வரை கொண்டு சென்று நமக்கு சாதகமாக ஆணையை 5.6.17 அன்று பெற்றுள்ளது. இதை தவிர, அங்கத்தினருடைய தனித்தனி பிரச்சினைகளை நம் கவனத்துக்கு கொண்டு வந்தால், அதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும், தீர்வு வரும்  வரை, TECA செயல்படுகிறது. 

நமது TECA 1998ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு - அப்போது 10-12 அங்கத்தினர் - இப்போது 560 அங்கத்தினர்களாக வளர்ந்துள்ளது. இது நம் சங்கத்தின் மீது அங்கத்தினர் வைத்துள்ள மட்டற்ற நம்பிக்கையை காட்டுகிறது. அதுவே இத்தகைய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக உள்ளது. இதற்கு நான் நமது சங்கத்தின் இயக்குனர்கள் எல்லாருக்கும் என் நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன். அவர்கள் பூரண ஒத்துழைப்பு நம் சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி செல்ல வழிகாட்டியாக உள்ளது என்றார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...