கோவை மாநகராட்சியைக் கண்டித்து வரும் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி முடிவு

கோவை மாவட்ட தி.மு.க தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்றன.

பின்னர் கூட்டத்தில், கோவை மாநகராட்சி குப்பைகளுக்கு வரி, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகை வசூல் செய்வது உள்ளிட்ட ஆணைகளை உடனே ரத்து செய்யக் கோரி 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறியதாவது:- கோவை மாநகராட்சி புதிய வரி சீராய்வு என்ற அடிப்படையில் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அளவிடுவது, குப்பைகளுக்கு வரி போடுவது, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகையாக 4,000 ரூபாய் செலுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சேய்து வருகிறது. 

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 18-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிளமேடு, குனியமுத்தூர், குறிச்சி, கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சிங்காநல்லூர், பெரிய கடை வீதி, பாப்பநாயக்கன் புதூர் என அந்தெந்த பகுதிகளின் சார்பில் டவுன் ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...