கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை. ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் எனப்படும் மரப்பாலம் உடைந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தரைப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால், சில மணி நேரங்களில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குன்னூர் தாலுக்காவில் பல இடங்களில் பெய்து வரும் கனமழையால், மண் சரிவும், மரங்களும் விழுந்துள்ளதால் போக்குவரத்து லேசாக பாதிக்கப்பட்டுள்ளது. துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கனமழை காரணமாக, குன்னூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மண்சரிவின் காரணாக ஊட்டி- குன்னூர் இடையே மட்டும் மலை ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் இயக்கப்படுகிறது