கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் கோவை பாரதி பாசறை சார்பில் பாரதி நினைவு நாள் விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் "அறம் பாட வந்த அறிஞர்" எனும் தலைப்பில் 'இலக்கியச் சுடர்' வழக்கறிஞர் இராமலிங்கம் அவர்களின் உரைவீச்சு மற்றும் "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்" என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில், பேசிய வழக்கறிஞர் ராமலிங்கம்; பாரதியாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி பாரதிதாசன் எழுதிய முக்கிய தொகுப்புகளை பாகிந்து கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில், ராய சொக்கலிங்கம் எழுதிய "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்" என்னும் நூலினை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இதில், பாரதி பாசறை செயலர் ஜான் பீட்டர், தலைவர் மோகன் சங்கர், வழக்கறிஞர் ராமலிங்கம், நிர்வாகி சண்முக சுந்தரம், தொழிலதிபர் ஏ.வி வரதராஜன், வக்கீல் தண்டபாணி மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.