தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் சிறப்பு மாநாடு

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில், அரசியல் சுயலாபத்திற்காகவும், வாக்கு வங்கி நோக்கத்திற்காகவும் மதவெறி சக்திகளை அம்பலப்படுத்தி மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவோம் என மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை நல்லாயன் சமூதாயக்கூடத்தில் மதநல்லிணக்க சிறப்பு மாநில மாநாடு சனிக்கிழமையன்று நடைபெற்றது. தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு மாநாட்டிற்கு கூட்டமைப்பின் துணைத்தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மதநல்லிணக்க சிறப்பு மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பேராசிரியர் அருணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆளூர்ஷா நவாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, மாநாட்டில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதில், அரசியல் சுயலாபத்திற்காகவும், பொருளாதார மேலாதிக்கத்திற்காக மகாத்மா காந்தியின் உன்னதமான கனவு தகர்க்கப்படுகிறது. மதவெறி அதற்கான ஆயுதமாகக் கையாளப்படுகிற சூழலில்தான் மத நல்லிணக்கத்திற்கான நடவடிக்கை அரசியல் பொருளாதார, சமூக கலாச்சார தளங்களில் தேவைப்படுகின்றன என இச்சிறப்பு மாநாடு கருதுகிறது. மதவெறியும், மக்களை மக்களுக்கு எதிராக நிறுத்துவதுமான அரசியலும் இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களே மதவெறி கருத்துக்களை வாக்கு வங்கி அரசியலுக்காக மக்கள் கவனத்தை பிரச்சனைகளிலிருந்து திருப்பி விடுவதற்காகவும் உலவவிடுவது வேதனைக்குரியதாகவும். கருத்துக்களை முன்வைப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதும், கொலை செய்யபடுவதும் அரங்கேற்றப்படுகின்றன. திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் முற்போக்கு சிந்தனையாளர்களை குறிவைத்து வன்முறை தூண்டுகிற வகையிலும், அச்சுறுத்துகிற வகையிலும் நடைபெறும் சூழல் ஆரோக்கியமான கருத்துருவாக்கத்திற்கு கேடுவிளைவிக்கும் என இம்மாநடு கருதுகிறது.

அதிகரித்துள்ள மதக்கலவரங்கள், பசுவை பாதுகாப்பது என்ற பெயரால் தொடரும் வன்முறைகள் சிறுபான்மையினர், தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. எனவே இச்சிறப்பு மாநாடு மத நல்லிணக்கத்திற்கான நன்முயற்சியில் அனைவரும் இணைத்து கொள்ளுமாறும், மதம், சாதி கடந்த கைகோர்ப்பதின் மூலம் அமைதி, நிம்மதி, வளர்ச்சியை உள்ளடக்கிய வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டுகோளை விடுக்கிறது. இந்திய நாட்டின் பன்முகக் கலச்சாரத்தை பாதுகாக்கிற முயற்சிகளுக்கு துணை நிற்குமாறு அனைத்து உழைப்பாளி மக்களையும் உரிமையோடு கேட்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...