சுடர் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறப்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


கரும்புக்கடை ஹிதாயா மகளிர் இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில் சுடர் குழந்தைகள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கான சிறப்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட மகளிர் அணி தலைவி பர்ஹானா ரியாஸ் தலைமை தாங்கினார்.



இதில் கலந்து கொண்ட தங்ககிளி, பாகியமேரி, மாணவி. இலாவண்யா மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் பல்சமய பிரார்த்தனை செய்தனர். சாந்தி ஆஸ்ரமம் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் விஜயராகவன் வரவேற்புரை ஆற்றினார்.



பின்னர், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு உணவுப் பொருட்களை அஸ்வதி அறகட்டளை சேர்ந்த சந்திரா வழங்கினார். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஜுவைரியா குழுவினர் குழந்தைகளுக்கான போட்டிகளை நடத்தி பரிசளித்தார். 



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பிற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ரேணுகா தேவி குழுவினர் வழங்கினர். பி.எஸ்.ஜி.,  கிருஷ்ணம்மாள், கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வத் தொண்டர்களாகவும் கலந்து கொண்டனர்.



Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...