கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் வீட்டை முற்றுகையிட்ட வெல்ஃபேர் பார்ட்டி அமைப்பினர்

வலுக்கட்டாயமாக நீட் தேர்வை தினிக்கும் மத்திய அரசையும், அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மாநில அரசையும் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி அமைப்பின் சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் தற்கொலையை கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்தும் கோவை, குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டை வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் இணைந்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.



அப்போது, வெல்ஃபேர் பார்ட்டி மாநில பொது செயலாளர் முகமது காசிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்களை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசினால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தை பற்றி கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்கும் வகையில் வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும். 



இந்த நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டால் காலப்போக்கில் சுகாதாரம் என்பது முற்றிலும் அளிக்கப்படும். ஏழைகளுக்கான மருத்துவம் என்பது கேள்விக்குரியாகிவிடும். மேலும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் தலையீடு மாநிலங்களில் இல்லாமல் இருக்கும். தமிழக அரசு உடனடியாக அவசர சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து இந்த நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதே வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.



இந்த போராட்டத்தில், எப்.ஐ.டி.யு மாநிலத் தலைவர் கோவை இப்ராஹிம், வெல்ஃபேர் பார்ட்டி மாவட்ட தலைவர் இ.எம்.எஸ், துணைத் தலைவர் ஷாஜஹான், பொருளாளர் முஜிப், எஸ்.ஐ.ஒ மாவட்டத் தலைவர் ஷபீர், வெல்ஃபேர் பார்ட்டி இணைச் செயலாளர் பீர் முகமது மற்றும் பெண்கள் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 45 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...