கோவையில் டிரிப் பேக்டரியின் முதலாவது விடுமுறை அங்காடி துவக்கம்

பயணம் செய்வோருக்கான புதிய அனுபவத்தை தரும் வகையில் கோவையில் முதலாவது விடுமுறை அங்காடியை டிரிப் பேக்டரி துவங்கியுள்ளது. இதனை நடிகர் மற்றும் இயக்குநருமான பாக்யராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நடிகை பூர்ணிமா பாக்யராஜ் குத்துவிளக்கேற்றினார்.



இதனைத்தொடர்ந்து, முதல் சுற்றுலா பயணத்திற்கான டிக்கெட்யை ஸ்ரீ அண்ணப்பூர்ணா ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். இந்நிறுவனம் ஏற்கனவே, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் துவங்கி, தற்போது கோவையிலும் அடியெடுத்து வைத்துள்ளது.



பெரும்பாலான பயணிகள் தங்களது விடுமுறை சுற்றுலா பயணத்தேவைக்கு நேரடியாக ஏஜெண்டுகளை தேடுகின்றனர். அல்லது நேரடியாக புக்கிங் செய்கின்றனர். ஆன்லைனில் 18 சதவிகிதம் பேர் மட்டுமே பதிவு செய்கின்றனர். எனவே, பயணம் செய்வோருக்கான அனைத்து தேவைகளும் டிரிப் பேக்டரியின் மூலம் கிடைக்க கோவையில் இந்நிறுவனம் துவங்கியுள்ளது.



இது குறித்து டிரிப் பேக்டரியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் அமித் அகர்வால் கூறுகையில், "விடுமுறையில் உள்நாட்டுப் பயணம், வெளிநாட்டுப் பயணம் அவரவர் விரும்பும் விதத்தில் அமைய தேவையான அனைத்து தொழிநுட்ப வசதிகளையும் டிரிப் பேக்டரி ஹாலிடே ஸ்டார் கொண்டுள்ளது. எங்களது தொடர்பில் உள்ள சப்ளையர், ஏர்லைன் பங்குதாரர்கள் சிறப்பான விலையை அளிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு குறைவான செலவு தான் ஏற்படுகிறது" என்றார்.

டிரிப் பேக்டரி நிறுவனர் வினாய் குப்தா பேசுகையில், "ஒவ்வொரு விடுமுறை பயணிகளையும் 2020-ம் ஆண்டுக்குள் சென்றடைய வேண்டும் என்பதே டிரிப் பேக்டரியின் திட்டம். பயணிகளுக்கு விரைவான சேவை, அருமையான அனுபவங்களை ஈடுஇணையற்ற வகையில் தர வேண்டும். டிரிப் பேக்டரியில் நுழைவோர் சில நிமிடங்களில் சுற்றுலா திட்டத்தை பெற முடியும். முழுமையான விடுமுறை சுற்றுலா அனுபவம் பல மடங்கு உயர்ந்ததாக அவர்களுக்கு தெரியும்" என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...