நீட் தேர்வு விவகாரம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜெயலலிதா கடிதம்

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. 

ஆனால், ஓராண்டுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இது, தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 





அதில், மத்திய அரசிடம் ஜெயலலிதா வலியுறுத்தியிருப்பதாவது:-  மருத்துவப் படிப்பிற்கான மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயல். நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு போதிய பயிற்சி மையம் இல்லை. அவ்வாறு இருந்தால், அதில் பயன்பெறக் கூடிய வசதியில்லாதவர்களாக உள்ளனர். 

சமூக - பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காகவே, தமிழக அரசின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், தொலைதூரக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், மாற்றம் செய்யக் கூடாது. எதிர்காலத்திலும், நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. 

இவ்வாறு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா,  பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...