மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.


பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையை அண்மையில் விரிவாக்கம் செய்தார். அதில், பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானை, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராக மாற்றம் செய்தார். 

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசுகையில், திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராக தன்னை நியமித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துறையில் எதிர்பார்த்ததை விட வளர்ச்சியை கொண்டு வருவேன். 

தற்போது, புதிய சுற்றுப்புறச் சூழலை உருவாக்கி, மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை  உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கட்டமாக, திட்டங்களுக்கான அளவு மற்றும் வேகத்தை மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.

அதிக சவால்கள் இருக்கக்கூடிய இந்தத் துறையில் உள்ள இடைவேளைகளை நிரப்பி, மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அவரைத் தொடர்ந்து,  மாநில திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அனந்த்குமார் ஹெட்ஜ்டே பேசுகையில்,  மாநில திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சராக தன்னை நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதல்படி, கொள்கைக்காகவும், சுற்றுசூழல் திறனை மேம்படுத்த பணியாற்றுவன் என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...