அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் - விடுதலை சிறுத்தை கட்சியினர்

அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென கூறி, கோவையில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து , சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத மனவிரக்தியில் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டி, கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்களை போலீசார் இழுத்து சென்று கைது செய்த போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...