ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது: வட்டார போக்குவரத்து அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அசல்  ஓட்டுனர் உரிமம் வைத்துக்கொண்டு தான் வாகனம் ஓட்டவேண்டும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உதரவிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு எதிரிப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும், லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி துரைசாமி, தமிழக அரசின் அசல் ஓட்டுநர் உரிமம் திட்டத்தை ரத்து செய்தார்.

இதனிடையே, ஒருசிலர் அசல் ஓட்டுனர் உரிமத்தை தவறவிட்டு, நகலினை பயன்படுத்தி வருவர். அவ்வாறாக தவறவிட்ட அசல் ஓட்டுனர் உரிமத்தை எப்படி பெறுவது ? என்பது குறித்து கோவை (மத்திய) வட்டார போக்குவரத்து  அலுவலர் உதயகுமார் சிம்ப்ளிசிட்டி-யிடம் கூறியதாவது:- 

ஒருவரின் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தபின்னர், அதற்கான சான்றிதழை சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் தான் மீண்டும் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். 

தற்போது, ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால்  காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டியது இல்லை. இணையதளம் வழியாக புகார் அளித்து அதற்கான சான்றிதழையும் பெற முடியும். அந்த சான்றிதழை அந்தந்த பகுதி வட்டாரப்போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைப்பதன் மூலம் மீண்டும் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும். 

இவ்வாறு அவர் கூறினார். 

அசல் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால் காவல்துறையினரின் இணைய சேவை மூலமாக புகார் அளிக்கும் வசதியை இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதன் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...