இப்படியே இந்த அரசியலை விட்டுவைப்பது அவமானம், இதை மாற்ற வேண்டியது நம் கடமை- நடிகர் கமல் பேட்டி

கோவை ஈச்சனரியில் நடிகர் கமலஹாசன் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய பொருளாளர் தங்கவேல் வீட்டு திருமண நிகச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

கடந்த 37 வருடங்களாக ரசிகர்களாக இயங்கிவந்தவர்கள் 30 வருடங்களாக நாட்டுக்கு தொண்டர்களாகவும் இருந்துள்ளனர். இந்த தகுதியை ஒரே நேரத்தில் பெற்றுவிடவில்லை. பொதுப்பணியில் உங்கள் வயதென்ன எனக்கேட்கும் சிறுபிள்ளைகளுக்கு சொல்ல வேண்டியது 30 வருடங்கள் என. மக்களுக்கு உழைத்ததை அமைதியாக செய்துவிட்டவர்கள் எனது ரசிகர்கள்.

எங்களைப் பார்த்து இரத்ததானம், கண்தானம் செய்தால் மக்கள் நம்மளை மதிப்பார்களா என்று எங்களிடமிருந்து கற்றுக்கொண்டவர்கள் கேள்விகேட்கிறார்கள். சமுதாயத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் சிரிப்பு வருகிறது. தன்னிலை மறந்தவர்களுக்கும் சூழ்நிலை மறந்தவர்களுக்கும் புத்தி சொல்லவோ, வாக்குவாதம் செய்யவோ விரும்பவில்லை. என்றைக்காவது ஒரு நாள் அரசியல் பயன்படும் என்று நம்பி செய்யவில்லை. இப்படியே இந்த அரசியலைவிட்டு வைப்பது அவமானம். இதை மாற்ற வேண்டியது நம் கடமை. அப்படியே விட்டு விட்டுபோக முடியாது.

நம் பாதையில் வரும் குண்டும்குழியும், வறுமையும் நாம் வரவழைத்துக்கொண்டது. வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல அரசியல்வாதிகள். நம் தெருவில், இருந்து உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நான் கோவப்படுவது உங்களுக்காக என்பது புரியும். கஜானாவில் இருந்து எனக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்டதால் அரசியல்வாதிகள் இப்படி ஆகிவிட்டீர்கள் என்று ஓட்டுக்கு காசு வாங்கி கொண்டு காட்டீனீர்களே அன்றே, கஜானா காலியாகிவிட்டது. அது என் சொத்து தொடதே என்று சொல்லியிருக்க வேண்டும். நீங்களும் பங்குகேட்டதால் தான் உங்களுக்கு இந்த நிலை.

ஐந்து வருடங்கள் பட வேண்டியது தான் 500, 1000 ரூபாய்க்கும் ஐந்து ஆண்டுகளை விற்றுவிட்டீர்கள். நீங்கள் மறந்தது தன்னிலை மட்டுமில்ல சூழ்நிலையும் கூட. உங்களோடு வாக்குவாதம் செய்ய தயாராய் இல்லை. 500, 100 ரூபாய்க்கு உங்கள் வாழ்க்கையை விற்று விடுகிரீர்கள், உங்களது பேரப்பிள்ளைகள் சுதந்திரமாக வாழ வேண்டும். களை பரிக்க வேண்டியது வயலை அல்ல வாழ்க்கையையும்தான், அதற்கான நேரம் உங்களுக்கு வந்துவிட்டது. நீங்கள் தலைவராக ஏற்க வாருங்கள் என்று என்னை பார்த்து கேட்கிறீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், தலைமை ஏற்கும் தைரியம் உங்களுக்கு வந்துவிட்டதா என்றால் அதற்கான வேலையை தொடங்குகள் இந்த சுப மூகூர்த்த வேளையில். இது அரசியல் பேச்சு அல்ல என் சமூகத்திற்காக பேசும் பேச்சு.

அரசியலில் உங்களை தூண்டிவிடும் வேலை அல்ல, உங்களது கடமையை நியாயப்படுத்துகிறேன். இது திருமண விழா மட்டுமல்ல நல்ல ஒரு ஆரம்ப விழாவாக இருக்கட்டும். 

என்பால் நம்பிக்கை வைப்பதை விட உங்கள் மேல் வையுங்கள், தொடர்ந்து கேள்வி கேளுங்கள், போராடுங்கள், உங்கள் கை சுத்தமாக இருக்கட்டும். பிறகு நீங்கள் கேட்கலாம் உங்கள் கை சுத்தமாக இருக்கிறதா என்று.

நிதமும் சாப்பிடுவதைப்போல நமக்கு ஒரு கடமை இருக்கிறது. விழித்திருங்கள், இனிமேல் இந்தியனுக்கு தனித்திருப்பதற்கும் பசித்திருப்பதற்கும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...