முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கோவை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்ததாவது; 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெறும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. 

அதன்படி 2016-2017-ம் ஆண்டின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களில் முதல் மதிப்பெண் மற்றும் இராண்டாம் மதிப்பெண் பெற்றுள்ள சிறார்க்களுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து முறையே ரூ.5,000 மற்றும் ரூ.3000 வழங்கப்படும். முன்னாள் படைவீரர் படைவிலகல் சான்றின்படி தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களது சிறார்களின் மதிப்பெண் பட்டியல் நகல்கள், தங்களின் படைப்பணிச் சான்று மற்றும் அடையாள அட்டை ஆவணங்களுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...