கோவையில் சர்வதேச கல்வி கண்காட்சி

வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஒரு நாள் சர்வதேச கல்வி கண்காட்சி வரும் செப்டெம்பர் 2ம் தேதியன்று பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை, அவினாசி சாலையிலுள்ள கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.

கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி கடந்த காலத்தில் இதே போன்ற கல்வி கண்காட்சிகளை நடத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கைக்கான ஆலோசனை வழங்கப்படும்.

இந்த நாடுகளின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் பாடங்கள், அதில் சேரும் முறைகள், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், விசா முறைகள், அந்த நாடுகளுக்கு செல்ல தேவைப்படும் முன் தகுதி தேர்வுகளான GRE, TOEFL, IELTS, GMAT மற்றும் SAT ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்படும்.

வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று சிறந்த முறையில் பயனடையலாம்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...