அமெரிக்காவின் சிஐஏ-விடம் இந்தியர்களின் ஆதார் விவரங்கள் : உண்மையை உடைத்த விக்கிலீக்ஸ்.!

கடந்த வெள்ளிக்கிழமை, விக்கிலீக்ஸ் நம்பமுடியாத தகவலொன்றை வெளியிட்டது. அதாவது, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (சிஐஏ) ஆனது ரகசியமாக இந்தியர்களின் ஆதார் தரவை அணுகுவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையின் தொழில்நுட்ப வழங்குநரான கிராஸ் மேட்ச் டெக்னாலஜீஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்லேன் (Expresslane) என்ற கருவியின் உதவியுடன் இந்த அணுகலை அமெரிக்க அரசாங்கம் பெறுவதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.

மென்பொருளில் நிபுணத்துவம்



கிராஸ் மெட்ரிக் டெக்னாலஜிஸ் என்பது பயோமெட்ரிக் மென்பொருளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு அமெரிக்க-அடிப்படையிலான நிறுவனம். வெளியான விக்கிலீக்ஸ் அறிக்கையின் படி, ஆதார் திட்டத்திற்காக இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் மூலம் சான்றளிக்கப்பட்ட முதல் பயோமெட்ரிக் சாதனங்களில் இந்நிறுவன சாதனமும் ஒன்றாகும்.

பயோமெட்ரிக் சேகரிப்பு










விக்கிலீக்ஸ் பதிவேற்றிய ஆவணங்களானது, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையின் தொழில்நுட்ப சேவைகள் (ffice of Technical Services - OTS) அலுவலகத்தினுள், உலகெங்கிலும் உள்ள சேவைகளுடன் தொடர்புகொள்வதற்க்கான ஒரு பயோமெட்ரிக் சேகரிப்பு அமைப்பை கொண்டுள்ளதாக கூறுகிறது.

இரகசிய தகவல் சேகரிப்பு கருவி



"சிஐ-வின் ஒரு பிரிவான தொழில்நுட்ப சேவைகள் அலுவலகம், உலகம் முழுவதும் உள்ள தொடர்பு சேவைகளை அணுகுமொரு பயோமெட்ரிக் சேகரிப்பு முறைமையை (biometric collection system) கொண்டுள்ளது. இந்த 'தன்னார்வ பகிர்வு' வெளிப்படையாக சிஏஐ-வால் நிகழ்த்தப்படவில்லை. ஏனென்றால் எக்ஸ்பிரஸ்லேன் (ExpressLane) என்பது இரகசிய தகவல் சேகரிப்பு கருவியாகும். கான் மூலம் தகவல் சேகரிப்புகளை இரகசியமாக சிஐஏ பெறுகிறது" என்று விக்கிலீக்ஸ் வலைத்தள அறிக்கை தெரிவிக்கிறது.

ஒசாமா பின்லேடனை அடையாளம்







மேலும், "எக்ஸ்பிரஸ்லேன் கருவியின் முக்கிய கூறுகளானது, சட்ட அமலாக்கம் மற்றும் நுண்ணறிவு சமூகத்திற்கான பயோமெட்ரிக் மென்பொருளில் நிபுணத்துவம் கொண்ட அமெரிக்க நிறுவனமான கிராஸ் மேட்ச் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம், ஒசாமா பின்லேடனை அடையாளம் கண்டு கொலை செய்தபோது இந்த நிறுவனத்தின் பெயர் செய்திகளில் அடிப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது" என்றும் விக்கிலீக்ஸின் அறிக்கை கூறுகிறது.

ஒற்றர்கள் கைகளில் ஆதார்







முதலில் "இந்தியாவின் தேசிய அடையாள அட்டை தரவுத்தளம், சிஐஏ உளவாளிகளால் ஏற்கனவே திருடப்பட்டுவிட்டதா.?" என்ற கட்டுரையை இணைத்து ட்வீட் ஒன்று செய்தது, பின்னர் மற்றொரு ட்வீட்டில் "ஒற்றர்கள் கைகளில் ஆதார்" என்று ஒரு கட்டுரையையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அறிக்கைகள் படி, விக்கிலீக்ஸ் கூற்றுக்கள் அனைத்தையும் இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...