நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்-ன் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான பந்தக்கால் நடும் விழா

நீலகிரி மாவட்டம் உதகை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் ஆகியோர் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா 11.09.2017 அன்று கொண்டாடுவதற்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. 



முன்னதாக, உதகை தமிழகம் விருந்தினார் மாளிகையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் நூற்றாண்டு விழா மாவட்டத்தில் வரும் 11.09.2017 அன்று நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், அமைச்சர் பெருமக்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற போட்டிகள் குறித்தும், விழா ஏற்பாடுகள் குறித்தும், நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுணன் மற்றும் ஏ.கே.செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...