போத்தனூர் ரயில் நிலையத்தில் செயலி மூலம் செயல்படும் டேக்சி சேவை அறிமுகம்

கோவை வடக்கு மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் சேலம் மண்டலம், தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் செயலி மூலம் செயல்படும் டாக்சி சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் போதிய வாகன சேவையின்றியும், அவ்வாறு கிடைக்கப்பெரும் டாக்சிகளிலும் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் தெரிவித்து வந்தனர். அதனை போக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு டேக்சி சேவையினை பூர்த்திசெய்யும் வகையிலும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இன்று செயலி மூலம் செயல்படும் டாக்சி சேவை மையம் திறக்கப்பட்டது .



போத்தனூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரயில்நிலைய மேலாளர் ஜெயக்குமார் நாயர் பங்கேற்று மையத்தினை திறந்து வைத்தார். கோவை வடக்கு ரயில் நிலையத்தில் நடைபெற்ற செயலி அறிமுக விழாவில் அந்த ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரன் பங்கேற்று டேக்சி செயலிக்கான மையத்தினை திறந்து வைத்தார். இதில், கோ டேக்சி மற்றும் ரெட் டேக்சி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளன.



மேற்குறிப்பிட் இரண்டு ரயில் நிலையங்களிலும் 850 கார்கள் செயல்படவுள்ள நிலையில், இதன் மூலம் ஆண்டுக்கு 16 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கார்களை நிறுத்துவதற்காக மட்டும் போத்தனூர் ரயில் நிலையத்தில் 480 சதுர மீ  இடமும், கோவை வடக்கு ரயில் நிலையத்தில் 400 சதுர மீ  இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயலியில் இடம்பெற்றுள்ள கார்கர் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...