விவேகம் திரைப்படத்தில் அஜித்தின் சிக்ஸ் பேக் கண்டு வியந்த ரசிகர்கள்

விவேகம் திரைப்படம் அஜித் நடிப்பில் இயக்குனர் சிவாவுடன் ஹாட்ரிக் படமாக அமைந்துள்ளது. அஜித்தின் இரண்டு வருட கடின உழைப்பிற்கு பிறகு இப்படம் இன்று திரைக்கு வந்தது. படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அக்‌ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓப்ராய் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித் முதல்முறையாக சிக்ஸ் பேக் தோற்றத்துடன் நடித்துள்ளது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.



இது குறித்து கோவை தீனா அஜித் ரசிகர் நற்பணிமன்றம் தலைவர் ராஜா கூறுகையில், அஜித் நடித்து தற்போது வெளிவந்துள்ள விவேகம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை வந்தது இல்லை. ஹாலிவுட் அளவில் இப்படம் தமிழில் இன்று வெளிவந்துள்ளது.



இயக்குநர் சிவா ஒரு வித்தியாசமான கதையை நடிகர் அஜித்துக்கு இப்படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் முக்கியமாக அஜித் சிக்ஸ் பேக் வைத்து நடித்தது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. ரொம்ப கடினமா இந்த படத்திற்கு தன்னை அற்பணித்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக, பைக் ஸ்டண்ட்ல அஜித்துக்கு இணையா யாரும் நடிக்க முடியாது' என்றார்.



இயக்குநர் சிவாவுடன் நடிகர் அஜித்துக்கு இது மூன்றாவது வெற்றிப்படமாக உள்ளது. நடிகர் அஜித்தின் விவேகம் திரைப்படம் இன்று வெளியானதைத் தொடர்ந்து, கோவை தீனா அஜித் ரசிகர் நற்பணிமன்றம் சார்பில் மரம் நடப்பட்டும், பட்டாசு வெடித்தும், ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திருவிழாவைப் போல் இன்று கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...