டெங்கு அபாயத்தில் மசால் லே-அவுட்: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?


கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு ஆளாகி 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 50 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆனால், இன்னும் அதிகாரிகள் பார்வைக்கு செல்லாமல் இருக்கிறது மசால் லே-அவுட். புலியகுளம் பகுதியில் உள்ள இந்த தெருவில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. வாலாங்குளம் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் இந்த மசால் லே-அவுட் வழியாக சென்று புலியகுளம் பகுதியில் உள்ள குட்டையில் சேர்கிறது. 



கழிவு நீர் பயணிக்கும் பாதையின் விளிம்பு பகுதியில், சுகாதாரமே இல்லாமல் ஒரு வாழ்கை நடத்தி வருகின்றனர் இப்பகுதி மக்கள். சுங்கம் பகுதியை அடுத்த காந்திநகரில் தொடங்கி, புலியகுளம் வரையில் இந்த கால்வாய் பயன்பட்டு வருகிறது. குப்பைகள் தேங்கி கழிவு நீர் செல்லும் வழி அடைபட்டுகிடப்பதாக அப்பகுதி மக்கள் தொடர் புகார் அளித்தனர். அதன் பேரில், கால்வாயின் பல இடங்கள் கவுன்சிலர் தலைமையில் தோண்டப்பட்டது. ஆனால், இன்று வரையில் அவை மூடப்படாமல் திறந்துகிடக்கின்றன. 



தற்போது, மீண்டும் குப்பை மண்டிகளால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. ‘சுற்றுப்புறத்தில் கழிவு நீர் தேங்காமல் பாத்துக்கொள்ளவும், அதிலிருந்து தான் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன’ என்று கூறும் அரசுக்கு கழிவு நீர் கால்வாயே தேங்கி நிற்பதும், அதனால், டெங்கு பரவும் என்றும் தெரியவில்லையா? என்று மசால் லே-அவுட் பகுதி மக்கள் குமுறுகின்றனர். துப்புரவு தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி இந்த மசால் லே-அவுட். ஊரையே சுத்தப்படுத்தும் இந்த மக்களின் வாழ்விடம் வாழ்வதற்கு அருகதையின்றி உள்ளது. 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20 முறைக்கு மேல் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். உயர் அதிகாரிகள் மேற்பார்வையிட வரும் போது மட்டும் எங்கள் பகுதி சுத்தம் செய்யப்படுகிறது. 



அதிலும், அதிகாரிகள் பார்வையிடும் ஒரு சில பகுதிகள் மட்டும் கண்துடைப்புக்காக சுத்தம் செய்கின்றனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது. எங்கள் பகுதியில் பல குழந்தைகள் உள்ளனர் அவர்களது ஆரோக்கியம் கேள்விக் குறியாகிவிட்டது. திறந்து கிடக்கும் கால்வாய்க்குள் பிஞ்சு குழந்தைகள் விழுந்து எழுவதும் வாடிக்கையாகிவிட்டது.’ என்றார்.  

மசால் லே-அவுட் பகுதியை ஒட்டியே பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த கழிப்பிடம் புனரமைக்கப்பட்டது. முகப்பில் மட்டும் வர்ண சாயங்கள் பூசி தரமான கழிப்பிடமாக காட்டப்படுகிறது. ஆனால், கழிவறையை உபயோகிக்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

கழிப்பிடத்தின் பின்புற சுவர் இடிந்து சாய்ந்துள்ளது. எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து அருகில் உள்ள கூரை வீடுகள் மீது வீழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பு இம்மக்களின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.​

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...