முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைய சசிகலா குடும்பத்தினரே காரணம் -சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி பேட்டி

கட்சியில் இருந்து ஒவ்வொருவாராக நீக்கி வரும் சசிகலா தரப்பு, உடனடியாக பொதுக் குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, எப்போது வேண்டுமானாலும் பொதுக் குழுவை கூட்ட தாங்கள் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்துள்ளார். 

கோவை, விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது வீட்டில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய அவர், தினகரனின் வற்புறுத்தல் காரணமாகவே 19 எம்.எல்.ஏக்கள் தமிழக ஆளுனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தினகரன், திவகாரன் ஆகிய இருவருக்கும் தேவை ஆட்சி கலைப்பே என புகார் கூறினார். 

ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் பற்றி பேச நாஞ்சில் சம்பத்திற்கு தகுதியில்லை எனவும், எம்.பி வைத்தியலிங்கத்தை நீக்க சசிகலா யார் என கேள்வி எழுப்பினார். சசிகலா பேச்சை கேட்டு ஆட்சியை கலைத்ததால் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கூறிய அவர், தினகரன், திவகாரன், சசிகலா குடும்பத்திற்கு இனி அதிமுகவில் இடம் கிடையாது என கூறினார். 

ஒரு கூட்டத்தில் பேச நாஞ்சில் சம்பத் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்குகிறார் எனவும், எங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை நாங்கள் பேசி கொள்வோம் என்றவர் இதில் நாஞ்சில் சம்பத் தலையிட கூடாது என எச்சரித்தார். 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க முன்வர வேண்டும் எனவும், அவர்கள் கூறுவது போல முதல்வரை மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

ஆட்சியை கவிழ்த்துவிட்டு 19 எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதி பக்கம் போக முடியுமா எனவும், தங்கள் வீட்டிற்கே போக முடியாது என கூறியவர். கட்சியில் இருந்து ஒவ்வொருவாராக நீக்கி வரும் சசிகலா தரப்பு, உடனடியாக பொதுக் குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, எப்போது வேண்டுமானாலும் பொதுக் குழுவை கூட்ட தாங்கள் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்தார். 

ஈ.பி.எஸ் அரசு ஊழல் ஆட்சி என ஒ.பி.எஸ் கூறியது குடும்பத்தில் அண்ணன், தம்பி சண்டை போல தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும், அதிமுகவில் நடைபெற்று வரும் டிராமாவிற்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படும் என கூறினார். 

தாறுமாறாக பேட்டி அளித்து வரும் புகழேந்தி, நாஞ்சில் சம்பத் இனி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். முன்னாள், முதல்வர் ஜெயலலிதா விரைவாக மரணம் அடைய சசிகலா குடும்பத்தினரே காரணம் என புகார் தெரிவித்தார். 

தினகரன் தரப்பில் இருந்து தனக்கு தொடர்ந்து அழைப்பு வந்துக் கொண்டிருப்பதாகவும், அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றவர். இ.பி.எஸ், ஒ.பி.எஸ் தலைமையில் பணி ஆற்றவே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...