மர்மமுறையில் மாணவர் உயிரிழப்பு : எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கோவை, சக்தி சாலையில் செயல்பட்டு வரும் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவர் உயிரிழந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் இன்று வரை வெளியில் கூறாமல் இருந்ததையடுத்து இன்று காலை அக்கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் ஒன்றிணைந்து வகுப்பை புறக்கணித்து கல்லூரியின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசாந்த் என்னும் மாணவர் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தீடீரென கல்லூரியின் விடுதியில் உயிரிழந்துள்ளார். ஆனால், பிரசாந்த் தற்கொலை செய்து உயிரிழக்கவில்லை என சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, பிரசாந்த் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், இறந்து இரண்டு நாட்கள் கடந்தும் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை எனவும் கூறி அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், கல்லூரி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேசுகையில், மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன், மாணவர் உயிரிழப்பில் உள்ள சந்தேகத்தை ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் எனவும், காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்பிற்குச் சென்றனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...