இணைந்த ஒருதாய் குழந்தைகள் - நீக்கப்பட்ட சின்னம்மா !

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சசிகலாவின் கையில் வசமடைந்தது. அதில் வெறுப்படைந்த அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்தார். தொடர்ந்து, சசிகலாவின் தலைமையில் அணிதிரன்ட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் எடப்பாடி.பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்து வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக அணிகள் மீண்டும் இணைக்கப்படும் என பலதரப்பினரால் கூறப்பட்டு வந்த நிலையிலும் இரு அணிகளுக்கு இடையிலும் கருத்து மோதல்களே தொடர்ந்து நிலவி வந்தது.

இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நேற்று (ஆகஸ்ட் 22) அதிமுக-வின் இரு அணிகளும் ஒருமனதாக இணைந்தன. 

தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர், நிதித்துறை பதவி ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அணிகள் இணைப்பிற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சின்னம்மாவாகிய சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் முன்மொழியப்பட்டது. நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின் தினகரன் மற்றும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...