மின்சார வேலிகளால் தொடரும் யானை உயிரிழப்புகள்

நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே கடந்த இரு நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தன. குட்டி யானை ஒன்று, இறந்த தாயை எழுப்ப துடித்தது அதனைக் கண்டோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின் உயிரிழந்த யானைகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அதேப் பகுதியில் புதைத்தனர். ஆனால், அப்பகுதியில் இருந்த செல்ல மறுத்து அந்த குட்டியானை அங்கேயே சுற்றி வந்தது. தொடர்ந்து, அதனை வேறு யானைக் கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

இதனிடையே, அதிக மின்சாரம் தாக்கியே அந்த இரு யானைகளும் உயிரிழந்துள்ளது எனக் கண்டறித்த வனத்துறையினர் தொடர்ந்து தலைமறைவாகவுள்ள நில உரிமையாளரை தேடி வருகின்றனர். 

பொதுவாக, இதுபோன்று வனப்பகுதிகளின் அருகே அமைந்துள்ள தனியார் தோட்டங்களில் மின்சார வேலி அமைப்பது யானைகளை குறிவைத்து அல்ல. அவை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்கவே. 

சட்டப்படி, காட்டுப்பன்றிகளை இவ்வாறு கொலை செய்வதும் ஒரு வகை வேட்டையே. தண்டனைக்குறிய செயல். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பெரும்பாலான கிராமங்களில் இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் காட்டுப் பன்றிகளை ஓரிருவர் இணைந்து அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். பெரிதாக வெளியில் தெரிவதில்லை. ஆனால், உடலளவில் பெரிய விலங்கான யானைகள் இவ்வாறான மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கும் போது அதனை அப்புறப்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களால் அவை எளிதில் வெளியில் தெரியவருகிறது.

இதில் குறிப்பாக கவணிக்கப்பட வேண்டியவை என்றால் மின்சார வேலிகள் அமைக்கும் போது பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளில் தொடர்ந்து மின்சாரம் பாயாதவாறு முறைப்படுத்த வேண்டும். ஆனால் இதனை நில உரிமையாளர்கள் பின்பற்றாததே யானை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கக் காரணம். 

துரதிருஷ்டவசமாக, யானைகள் இதுபோன்ற மின்சார வேலியில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், சில உரிமையாளர்கள் காட்டுப்பன்றி உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதற்காக வைக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகளில் சிக்கி யானைகளும் உயிரிழப்பது தொடர்கதையாகத்தான் உள்ளது. 2016-ல் மட்டும், ஆறு யானைகளுக்கு மேல் இதுபோன்ற நாட்டு வெடி குண்டுகளினால் பாதிக்கப்பட்டுள்ளன. கொடூரமாக உயிரிழந்தும் உள்ளன.

இனிவரும் காலங்களினேலும், மனித- விலங்குகளுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஏனெனில், மனிதர்கள் கூட சமீப காலங்களில் இத்தகைய வேலிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற முறையற்று செயல்படும் வன்முறையாளர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கும், மனித- விலங்கு மோதல்களுக்கும் ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கான முறைகளை அதிகாரிகள் அதிக அளவில் பின்பற்ற வேண்டும். மனிதர்களும் விலங்குகளிடத்தில் கவணம் கொள்ள வேண்டும்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...